மீன் கட்லெட்
  • 290 Views

மீன் கட்லெட்

தேவையான பொருட்கள்:

  • நல்ல சதைப்பற்றுள்ள மீன் - 1/2 கிலோ
  • ரொட்டித்தூள் - ஒரு கப்
  • உப்பு - ருசிக்கேற்ப
  • நெய் - 4 டீஸ்பூன்
  • வறுத்து பொடி செய்த சீரகம் - ஒரு டீஸ்பூன்
  • பூண்டு - 10 பல்
  • நசுக்கிய இஞ்சி - 2 துண்டு
  • நறுக்கிய வெங்காயம் - 4
  • அடித்த முட்டை - 2

செய்முறை:

மீனை வேக வைத்து முள்ளை நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும். வெங்காயம், ரொட்டித்தூள், இஞ்சி, பூண்டு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு, முட்டை எல்லாவற்றையும் மீன் விழுதோடு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். விழுதை ஒரே அளவுள்ள சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக்கிக் கொள்ளவும் தவாவில் நெய்யை சூடாக்கி மீன் கட்லட்டுகளைப் போட்டு, இருபுறமும் சிவக்க விட்டு எடுத்து சூடாகப் பரிமாறவும்.