மீன்களை நன்றாக சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்களையும் உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு விழுது கலந்து கழுவி வைக்கப்பட்டுள்ள மீன் துண்டுகள் மீது சமமாகப் பூசிவிடவும். தயிர் சேர்ப்பதால் மீனின் வாடை நீங்கி விடும். 2 மணி நேரம் மசாலா மீனில் ஊறினால் வறுவலின் ருசி அதிகாறிக்கும். சூடாக்கப்பட்ட தவாவில் மீன் துண்டுகளையும் போட்டு கொஞ்சமாக எண்ணை விட்டு 2 புறமும், திருப்பிப்போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். இதன் ருசியே தனிதான்.