ஃப்ரூட் அண்ட் வெஜ் கூலர்
  • 296 Views

ஃப்ரூட் அண்ட் வெஜ் கூலர்

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் - 1
  • கேரட் - 1
  • ஆப்பிள் - 1
  • ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி - 1
  • எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள் ஸ்பூன்
  • சர்ககரை - சுவைக்கு ஏற்ப
  • புதினா இலைகள் - 10
  • மிளகுத்தூள் - 1 சிட்டிகை
  • உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

காய்கறி, பழங்களை கழுவித் துடைத்து, தோல் சீவி நறுக்கிக் கொள்ளுங்கள். விதைகளை நீக்கிவிடுங்கள். மிக்ஸியில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு சர்க்கரை, மிளகுத்தூள், உப்பு எல்லாம் சேர்த்து, எலுமிச்சம்பழம் சாறையும் சேர்த்து அடித்து, சாதாரண வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய புதினா இலைகள், ஐஸ் கட்டி சேர்த்துப் பரிமாறுங்கள்.