பழக்கலவையுடன் பாதியளவு சர்க்கரையைப் பிசறி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ளதைக் காய்ச்சுங்கள். காயும் பாலில் சர்க்கரையைச் சேர்த்து, கொதிக்க விடுங்கள்.
தனியாக எடுத்து வைத்திருக்கும் அரை கப் பாலில் கஸ்டர்டு பவுடரை கலந்து, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். நன்கு ஆறியதும் பழக்கலவையைச் சேர்த்து குளிரவைத்துப் பரிமாறுங்கள்.