புரூட் காக்டெய்ல்
 • 443 Views

புரூட் காக்டெய்ல்

தேவையான பொருட்கள்:-

 • ஆரஞ்சு சாத்துக்குடி - 2
 • அன்னாசி, திராட்சைச்சாறு - 1 லிட்டர் (அனைத்தும் சேர்த்து)
 • எலுமிச்சம் சாறு - 1 லிட்டர்
 • இஞ்சிச்சாறு - சிறிதளவு
 • சர்க்கரை - 2 கிலோ,
 • தண்ணீர் - 1 லிட்டர்,
 • சிட்ரிக் அமிலம் - 7 தேக்கரண்டி
 • சோடியம் பென் சோயிட் - 1 தேக்கரண்டி
 • கலவைப் பழ எஸன்ஸ் - 2 தேக்கரண்டி
 • ராஸ் பெர்ரி வண்ணம் - தேக்கரண்டி

செய்முறை:-

சர்க்கரை, சிட்ரிக் அமிலம் இரண்டையும் தண்ணீரோடு சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி ஆற வைக்கவும். சர்க்கரைக் கரைசல் நன்றாக ஆறிய பிறகு பழச்சாறு, இஞ்சிச்சாறு, பழ எஸன்ஸ், வண்ணம், சோடியம் பென் சோயிட் சேர்த்து ஈரமில்லாத சுத்தமான பாட்டில்களில் நிரப்பவும். திராட்சைப் பழச்சாறு சேர்க்காவிடில் சோடியம் பென் சோயிட்டிற்குப் பதிலாக கே.எம்.எஸ். 2 தேக்கரண்டி சேர்க்கவும்.