ஃப்ரூட் பஞ்ச்
  • 270 Views

ஃப்ரூட் பஞ்ச்

தேவையான பொருட்கள்:

  • பப்பாளி - 100 கிராம்
  • மேங்கோ - 100 கிராம்
  • ஆரஞ்சுப்பழம் - 100 கிராம்
  • திராட்சை - 100 கிராம்
  • எலுமிச்சம்பழம் - பாதியளவு
  • சோடா (கோலிசோடா அல்லது ஸ்பிரிட்)
  • சுகர் - 200 கிராம்
  • வாட்டர் - 10 மில்லி
  • உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

எலுமிச்சம்பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையும் நன்றாக தோல் நீக்கி மிக்ஸியில் ஜூஸாக்கி விட வேண்டும். இல்லையெனில், பழங்களை சின்னச்சின்ன துண்டுகளாக "கட்" பண்ணிக்கொண்டு சுகரையும், தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து விட்டு, பிறகு எலுமிச்சம் பழத்தையும் சோடாவையும் சேர்த்துவிட்டால் "ஃப்ரூட் பஞ்ச்" ரெடி. குழந்தைங்க இதை விரும்பிச் சாப்பிடுவாங்க. பிரிஜ்ஜில் வைத்து எல்லோரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகி மகிழலாம்.

டயட்

அஞ்சு பழங்களை மிக்ஸ் பண்ணி செய்வதால்தான் இதற்கு ஃப்ரூட்பஞ்ச். பப்பாளியில் "ஏ" விட்டமின் அதிகம். ஆரஞ்சு-"சி" விட்டமின், பப்பாளியைத் தவிர மீதி நான்கு பழமும் சிட்ரஸ் ஃபுரூட்ஸ். (சிட்ரஸ் அமிலம் நிறைந்தது).