ஃப்ரூட் சாலட்
  • 228 Views

ஃப்ரூட் சாலட்

இந்த மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம்பழம், நுங்கு இவைகளைக் கொண்டு எளிதான சுவையான பழக் கலவை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • தோல் சீவி சிகப்பான பகுதியை துண்டுகளாக்கிய தர்பூசணி - 1 கப்
  • கிர்ணிப்பழம் - 1 கப்
  • முலாம் பழம் - 1 கப்
  • இனிப்பான நார் இல்லாத மாம்பழம் - 1 கப்
  • இளசாக உள்ள நுங்கு துண்டுகள் - 1 கப்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்
  • தேவையானால் கஸ்டர்டு பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • பால் - 1 கப்

 

(இது தவிர வாழைப்பழத் துண்டுகள் - 1 கப், கொட்டையில்லாத திராட்சை - 1 கப், பப்பாளி (இனிப்பானது) துண்டுகள் - 1 கப், காஸ் மீது வைத்து அரை நிமிடம் சுட்டு, தோல் நீக்கி, குறுக்கே வெட்டி, விதைகள் நீக்கி துண்டுகள் போட்ட இனிப்பான பெங்களூர் தக்காளி - 1 கப் என்று எந்தப் பழம் சீப்பாக கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம்.)

செய்முறை:

* எல்லாவற்றையும் சேர்த்து நறுக்கி ப்ரிட்ஜ்ஜில் ட்ரேயில் வைக்கவும்.

* பால் சூடாக்கி, குளிர்ந்த பால் கரைத்த கஸ்டர்டு பவுடரை அதில் ஊற்றி அடி பிடிக்காமல் கொதித்ததும் நன்கு ஸ்பூனால் குழைத்து ஆறியதும் தேன், வெனிலா எசன்ஸ் சேர்த்து ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

* குழந்தைகளுக்குத் தேவையான போது பழக் கலவையின் மீது - 1 ஸ்பூன் கஸ்டர்ட் போட்டு கிண்ணத்தில் கொடுத்தால் எல்லா பழங்களையும் சாப்பிடுவார்கள்.

* சுமார் - 15 குழந்தைகள் பங்குபெறும், பிறந்தநாள் விழா அல்லது கெட் டு கெதர் பார்ட்டிக்கு - 2 மாம்பழம், - 1 கிர்ணிப்பழம், - 1 முலாம் பழம், - 4 தக்காளி, 100 - கிராம் திராட்சை, - 10 நுங்கு போதும். குறைந்த செலவில் சத்தான சுவையான விலை குறைவான சாலட் ரெடி. தோல் சீவிக் கொடுத்து விட்டால் அவர்களே தயாரித்து விடுவார்கள்.