வெத்தலை-பூண்டு சாதம்
  • 80 Views

வெத்தலை-பூண்டு சாதம்

சாதத்துல பல வகைகள் செஞ்சு சாப்பிட்டிருப்போம்.... வெத்தலை-பூண்டு சாதம்னு ஒரு சாதம் இருக்கு தெரியுமா? பசியே எடுக்கல... செரிமானமே ஆகமாட்டேங்குதுனு சொல்றவங்க இந்த சாதத்தை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நன்கு பசியெடுக்கும். வாயு சம்பந்தமான எந்த பிரச்சினையும் உங்களை அணுகாது.

தேவையான பொருட்கள்:

  • வெற்றிலை - 3
  • சீரக சம்பா அரிசி - 1/4 கிலோ
  • பூண்டு - 5 பல்
  • சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
  • பட்டை - 1 துண்டு
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • ஸ்பெஷல் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப

ஸ்பெஷல் மசாலாவுக்கு:

  • கருப்பு எள் - 1 டீ ஸ்பூன்
  • மிளகு - 1 ஸ்பூன்
  • சுக்குப் பொடி - 1/2 டீ ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - 5
  • விரலி மஞ்சள் - அரை இன்ச்
  • உப்பு - தேவைக்கேற்ப

எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்

செய்முறை:

* அரிசியை உதிரியாக வேக வைத்துக் கொள்ளவும்.

* கடாயில் நெய் விட்டு, பட்டை, சோம்பு வறுக்கவும்.

* பூண்டு சேர்க்கவும்.

* வெற்றிலையை நறுக்கிச் சேர்க்கவும்.

* ஸ்பெஷல் மசாலா பொடியும் உப்பும் சேர்த்து, தண்­ணீர் தெளித்து வதக்கவும்.

* வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, தீயைக் குறைத்து ஒரு கை தண்­ணீர் தெளித்துக் கலந்து, மூடி வைக்கவும்.

* 3 நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கவும்.