ஜின்ஜர் சிக்கன்
  • 742 Views

ஜின்ஜர் சிக்கன்

தேவைப்படும் பொருட்கள் :

1. ஸோயா ஸாஸ் - 1/2 கோப்பை
2. இஞ்சி - 1 சிறு துண்டு
3. பூண்டு - சின்னதாக ஒன்று
4. வினிகர் - 1/4 தேக்கரண்டி
5. சர்க்கரை - 1 தேக்கரண்டி
6. தக்காளிப் பழமூ - 1
7. உப்பு - ருசிக்குத் தேவையானது
8. மிளகு - 1 தேக்கரண்டி
9. பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
10. காளான் - 4
11. சோளமாவு - 1 மேஜைக் கரண்டி
12. ஷெர்ரி - 1 மேஜைக் கரண்டி
13. கோழிக் கறி - 500 கிராம்

முன்னேற்பாடு - 1

1. இஞ்சியைக் கழுவிக் கொள்ளவும்
2. கத்தியினால் தோலை நீக்கிக் கொள்ளவும்.
3. அம்மியில் வைத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
4. இதை வழித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 2

1. வெள்ளைப் பூண்டைத் தோல் நீக்கவும்.
2. அம்மியில் வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
3. வழித்துத் தனியே வைத்துக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 3

1. தக்காளிப் பழத்தைக் கழுவிக் கொள்ளவும்
2. சின்னதாக வெட்டிக் கொள்ளவும்
3. தக்காளியின் மேல் தோலை நீக்கிக் கொள்வது நல்லது
4. இதை அம்மியில் வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 4

1. மிளகை அம்மியில் வைத்துத் தூளாக்கிக் கொள்ளவும்
2. தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 5

1. ஒரு பாத்திரத்தை எடுத்துக் காளான்களை அதில் போடவும்
2. வெது வெதுப்பான நீரை அதன் மேல் ஊற்றவும்
3. சுமார் இருபது நிமிடம் வரை அப்படியே வைத்திருக்கவும்.
4. இருபது நிமிடத்துக்குப் பிறகு வெளியே எடுத்துத் தண்டுப் பகுதியை நீக்கி விடவும்.
5. காளானை மட்டும் சின்னச் சின்னத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

முன்னேற்பாடு - 6

1. ஒரு பாத்திரத்தில் ஒரு மேஜைக் கரண்டியளவு ஷெர்ரியைப் போடவும்
2. அதில் சோளமாவைப் போடவும்
3. கலந்து வைத்துக் கொள்ளவும்

முன்னேற்பாடு - 7

1. கோழிக் கறியைக் கழுவவும்
2. துண்டுகளாக்கவும்
3. பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீரை ஊற்றி அடுப்பின் மேலேற்றி அதனை வேக விடவும்.
4. வெந்தவுடன் அதில் உள்ள கறியை மட்டும் எடுத்துத் தனித் தட்டில் வைக்கவும்
5. கறி வெந்த நீரைத் தனியே பத்திரப்படுத்தவும்

தயாரிப்பு முறை :

1. இப்போது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் கீழ் வரும் பொருட்களைப் போடவும்.

i. சோயா ஸாஸ்,
ii. இஞ்சி விழுது
iii. பூண்டு விழுது
iv. வினிகர்
v. சர்க்கரை
vi. தக்காளி விழுது
vii. உப்புத் தூள்
viii. மிளகுப் பொடி
ix. பச்சைக் கற்பூரம்

3. இதனை அப்படியே அடுப்பில் ஏற்றவும்
4. கொதிக்க விடவும்
5. இரண்டு நிமிடம் கழிந்த பின் இறக்கி விடவும்
6. இப்போது அடுப்பில் ஒரு வாணலியைப் போடவும்
7. அதில் எண்ணெயை விடவும்
8. காய வைக்கவும்
9. காய்ந்தவுடன் வேக வைத்திருக்கும் இறைச்சித் துண்டுகளை அதில் போட்டு விடவும்.
10. இதனை நான்கைந்து நிமிடங்கள் வதக்கவும்.
11. இதனுடன் மேலே சொல்லப்பட்ட ஸோயா ஸாஸ் கலவையைக் கலக்கவும்
12. இறைச்சி வேக வைத்த நீரையும் கலந்து விடவும்
13. எல்லாவற்றையும் கொதிக்க விடவும்.
14. இதன் பின்னர், இதில் காளான்களைச் சேர்க்கவும்
15. மெல்லிய அனலில் வைத்திருக்கவும்
16. மேற்படிக் கலவை நன்றாகக் கெட்டியானவுடங்ன அடுப்பிலிருந்து இதை இறக்கி விடவும்.
17. இத்துடன் ஷெர்ரியில் கலக்கப்பட்டுள்ள சோளமாவையும் கலக்கவும்.
18. ஜின்ஜர் சிக்கன் ரெடி.