இஞ்சிக் குழம்பு
  • 97 Views

இஞ்சிக் குழம்பு

அடிக்கடி வயிறு பொருமிக்கிட்டிருக்கா.. அஜீரணத்தால சரியா சாப்பிடக் கூட முடியலன்னு அலுத்து கொள்கிறவர்களுக்காக இதோ காரைக்குடி ஸ்பெஷல் அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி குழம்பு..

தேவையான பொருட்கள்:

  • புளி - 2 எலுமிச்சம்பழம் அளவு உருண்டை
  • இளசான இஞ்சி - 50 கிராம்
  • காய்ந்த மிளகாய் - 5
  • வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் -  1
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • வெல்லம் - ஒரு சிறிய கட்டி
  • கடுகு - 1 டீ ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பெருங்காயம் - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* இஞ்சியைக் கழுவி தோல் சீவி, பொடியாக நறுக்கவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

* புளியை வெந்நீரில் ஊறப் போடவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துண்டுகளை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை வறுத்து எடுத்து, அதே கடாயில் காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும்.

* வறுத்த மிளகாய், வெந்தயம், தேங்காய் துருவல்... இந்த மூன்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.

* சிறிது எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.

* புளியைத் தேவையான தண்­ணீர் விட்டுக் கரைத்து, அதில் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம், வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

* ஒரு கொதி வந்ததும் வதக்கிய இஞ்சித் துண்டுகள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

* நன்றாகக் கொதித்ததும் இறக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

* அஜீரணம், பித்தத்துக்கு ஏற்ற குழம்பு இது.

* வெங்காயம் சேர்க்காமல் செய்தால் விசேஷ நாட்களிலும் பயன்படுத்தலாம்.