ஜில் ஜில் இஞ்சி ஷேக்
  • 499 Views

ஜில் ஜில் இஞ்சி ஷேக்

தேவையான பொருட்கள்:

  • இஞ்சி துண்டங்கள் - 2 டீஸ்பூன்
  • காய்ச்சி பால் - 1 கப்
  • சாக்லேட் ஐஸ்க்ரீம் - 1 கப்
  • தேன் - டேபிள்ஸ்பூன்
  • ஐஸ் துண்டங்கள் - 1/2 கப்

செய்முறை:

தோல் சீவிய இஞ்சியை துண்டாக்கி விழுதாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டி சாறாக வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுண்ட காய்ச்சிய பாலையும், ஐஸ்கிரீமையும், தேனையும் ஐஸ் துண்டங்களையும் சேர்த்து மிக்ஸ் ஷேக்காக மிக்ஸியில் இட்டு அடித்து எடுக்கவும்.

கோடையில் பித்த கிறுகிறுப்பு மேலிடும்போது குளிரக் குளிர குடித்து மகிழலாம் இந்த ஷேக்கை.