வாழைக்காய்ப் பச்சடி
  • 815 Views

வாழைக்காய்ப் பச்சடி

தேவையான பொருள்கள்

  • வாழைக்காய் - 1
  • வெங்காயம் - 3
  • துவரம் பருப்பு - 100 கிராம்
  • மிளகாய்த் தூள் - 5 கிராம்
  • கடுகு, உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
  • பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள். வாழைக்காயைக் கழுவித் தோலைச் சிவி, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பைப் போட்டுத் தாளித்துக் கொண்டு, வாழைக்காய்த் துண்டுகள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.

அதில் புளியைக் கரைத்து ஊற்றுங்கள். இறுதியாக, வேக வைத்த துவரம் பருப்பைப் போட்டு கிளறி விடவும். அனைத்துப் பொருட்களும் நன்கு வெந்ததும் இறக்குங்கள். வாழைக்காய்ப் பச்சடி தயார்.