பயறு லட்டு
  • 554 Views

பயறு லட்டு

பச்சைப்பயறுக்கும், பயத்தம் பருப்புக்கும் என்ன டிஃப்ரெண்டுன்னு கேட்கிறீங்களா? பச்சைப் பயறுங்கிறது தோலோடு முழுசா இருக்கும். அதை தோல் நீக்கி உடைச்சதுக்கப்புறம் பயத்தம் பருப்பு. ஆனா, அந்தத் தோலோடு சாப்புடுற பச்சைப்பயறுக்குத்தான் நிறைய சத்து இருக்கு. நம்ம உடம்பை கூல்... கூல்... குளுமையாக்கி, எந்தவிதமான அஜீரணக் கோளாறும் இல்லாம ஆரோக்கியமா வெச்சுக்க துணைபுரியுது. எலும்புக்கு வலுசேர்க்கும் வல்லமை பெற்றது. நார்ச்சத்து நிறைந்தது. அப்பேர்ப்பட்ட பச்சைப்பயறு கொண்ட உணவுகளை யாரும் அதிகமாக தயார் பண்றதில்ல... இதோ, சிம்பிளான இந்த ஸ்வீட்ட பண்ணி சூப்பரான பாராட்டைப் பெறுங்க...!

தேவையான பொருட்கள்:

  • வறுத்த பயறு மாவு - 1 கப்
  • நாட்டுச் சர்க்கரை - 3/4 கப்
  • நெய் - 1/4 கப்
  • ஏலப்பொடி - 1 டீ ஸ்பூன்
  • முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் - கொஞ்சம்

செய்முறை:

* முழுப் பயறை வெறும் வாணலியில் நல்ல வாசனை வரும் வரை காந்தாமல் மிதமான சூட்டில் வறுக்கவும்.

* ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

* நாட்டுச் சர்க்கரையை நன்கு பொடித்து இதனுடன் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, பேரீச்சம்பழம் சேர்த்து நன்கு சூடாக்கிய நெய் ஊற்றி உருண்டைகள் பிடித்து ஆறியபின் டப்பாவில் வைக்கவும்.

* சத்தான, ருசியான பயற்றம் உருண்டை தயார்.