பச்சைப் பட்டாணி பராத்தா
  • 81 Views

பச்சைப் பட்டாணி பராத்தா

தேவையானவை:-

  • முழுக்கோதுமை மாவு - 1 கப்.
  • வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப்,
  • நறுக்கிய பச்சை மிளகாய் - 1
  • தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:-

வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையவும். 5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான் - ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.