முருங்கைக் கீரை அடை
  • 277 Views

முருங்கைக் கீரை அடை

தேவையானப் பொருட்கள்:

  • முருங்கைக் கீரை - 2 பிடி
  • அரிசி மாவு - கால் கிலோ
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • வெங்காயம் - 2
  • பச்சை மிளகாய் - 2
  • தண்ணீர் - 3 டம்ளர்

செய்முறை:

வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளுங்கள். கீரையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த நீரில் முருங்கைக் கீரை, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கலந்து கொள்ளுங்கள். அரிசி மாவை இதில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு கிளறிக் கொண்டேயிருங்கள். அரிசி மாவு வெந்து குழைந்து இறுகி வரும்போது கலவையை இறக்குங்கள்.

கலவை ஆறியதும் அடைகளாக தவாவில் தட்டி இரு பக்கமும் சுட்டு எடுங்கள்.