ஹெர்பல் சூப்
  • 133 Views

ஹெர்பல் சூப்

தேவையானவை:

  • துளசி - ஒரு கைப்பிடி
  • புதினா - ஒரு கைப்பிடி
  • மல்லித்தழை - ஒரு கைப்பிடி
  • வெற்றிலை - 2
  • கறிவேப்பிலை - 10
  • இலைகள்கற்பூரவல்லி - 2 இலை
  • பெரிய வெங்காயம் - 1
  • பூண்டு - 2 பல்
  • மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
  • எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

எல்லா இலைகளையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பிறகு, இலைகளை சேர்க்க வேண்டும். இவற்றையும் சற்று நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நடுத்தரத் தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு, இலைகளை தனியே எடுத்து அரைத்து மீண்டும் வேகவைத்த தண்ணீரில் சேர்த்து கலந்து வடிகட்டுங்கள். நன்கு சூடாக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து பரிமாறுங்கள்.