ஹோம் மேட் சாக்லேட்
  • 383 Views

ஹோம் மேட் சாக்லேட்

சாக்லெட் பிடிக்காதவங்களே இருக்க முடியாதுன்னு சொல்லலாம்...ஏன்னா அந்தளவுக்கு சாக்லெட்டுக்கு அடிமையாயிடுறோம்... அதுவும் வீட்டிலேயே செய்து கொடுத்தால் சுவை இன்னும் அதிகரிக்கும். இனிப்புடன் உங்க பாசமும் பளிச்சிடும். செஞ்சு கொடுத்து உங்க குழந்தைகளின் பாராட்டையும் அன்பையும் அள்ளிக்கோங்க.

தேவையான பொருட்கள்:

  • டார்க் சாக்லேட் பார் - 1
  • பிரவுன் சாக்லேட் பார் - 1
  • முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் - தேவையானது

செய்முறை:

* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
 
* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் ரெண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் ட்ரை புரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.
 
* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
 
* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.

* கேஸை ஒரே சூட்டில் வைத்திருக்கவும் அப்போது தான் சூடு மேல் இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.
 
* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்திற்கு வர வேண்டும்.
 
* பின்னர், சாக்லேட் ட்ரே எடுத்து அதனுள் ஊற்ற வேண்டும்.

* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.
 
* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ப்ரூட்ஸ் போடவும்.
 
* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்ற வேண்டும்.
 
* இந்த ட்ரேயை எடுத்து ப்ரீசரில் 15 நிமிடம் வைக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.
 
* எல்லா டிபார்ட்மெண்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.
 
குறிப்பு: கீழ் வைக்கும் பாத்திரத்தை விட, மேல் வைக்கும் பாத்திரம் பெருசாக இருக்க வேண்டும், அப்போது தான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக ஈசியாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கி கொண்டே இருக்க வேண்டும். இல்லைனா, கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் கீழ் உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் கம்மியானால், ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரே உபயோகப்படுத்தலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடற ஹோம் மேட் சாக்லேட் கம்மி செலவுல, வீட்டிலேயே பண்ணலாம். ட்ரைப்ரூட்ஸ் பதிலாக, நம்ம விருப்பத்துக்கு என்ன வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேபெர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கட், போலோ ஆகியவைகள்.