குண்டா இருக்குறவங்களுக்காக இந்த சிம்பிள் கொள்ளு பொங்கல். சாப்பிட்டு பாருங்க.. இதன் சுவையும் ஆரோக்கியமும் கொஞ்சம் வெயிட் கம்மி பண்ண உதவும். ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்...!
* கொள்ளை வாசம் வரும்வரை நன்கு வறுத்து உரலில் குத்தி உமி போக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
* அதை அரிசியுடன் ஒன்றாகக் கலந்து கழுவி உலை கொதித்தபின் போட்டு வேக விடுங்கள்.
* பாதி வெந்ததும் உப்பு போட்டு நன்கு குழைய விடுங்கள்.
* பின், நெய் விட்டு, கூடவே சீரகம், மிளகு இரண்டையும் தாளித்துக் கொள்ளுங்கள்.
* இந்தப் பொங்கலின் ஸ்பெஷல் என்ன தெரியுமா..? இது ஊளைச் சதையைக் குறைக்கும்.