ராகி காபி
  • 497 Views

ராகி காபி

பீட்ஸா, பர்கர்னு அடிமையா கிடக்குறாங்க எங்க பசங்கனு புலம்புகிற தாய்மாரா நீங்கள்... அப்படின்னா உங்களுக்கான ஸ்பெஷல் தயாரிப்புதான் இந்த ராகி காபி... ஜங்க்ஃபுட் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம். இது உடம்புக்கு ஆரோக்கியமானதும்கூட!

தேவையான பொருட்கள்:

  • கேழ்வரகு - 1/4 கிலோ
  • கருப்பட்டி - 100 கிராம்
  • ஏலக்கய் பொடி - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

* கேழ்வரகை ஒரு முறை கழுவி விட்டு, முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.

* 12 மணி நேரம் ஊற வேண்டும்.

* அடுத்த நாள், ஊறிய தண்­ணீரை வடித்து, அதில் கருப்பட்டி, ஏலக்காய் பொடி சேர்த்துக் கொதிக்க வைத்து அப்படியே குடிக்கவும்.

* ஊறிய கேழ்வரகை 1 கைப்பிடி சாதமும் உப்பும் சேர்த்து வேக வைத்து, ஆற வைக்கவும்.

* வெந்ததை உருட்டி, பழைய சாதத் தண்­ணீரில் ஊற வைக்கவும்.

* அடுத்த நாள், அந்த உருண்டையை மோருடன் சேர்த்து, பச்சை வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மிளகாய் அல்லது மாங்காய் தொட்டு சாப்பிட உடம்புக்கு அத்தனை ஆரோக்கியம்.

ஜங்க்ஃபுட் பிரியர்களுக்கு அதை மறக்க வைக்கிற அதிசய உணவு இது!