பலாப்பழ ஜூஸ்
  • 412 Views

பலாப்பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  • நன்கு பழுத்த, இனிப்பான பலாச்சுளைகள் - 30
  • சர்க்கரை - 5 கப்
  • தண்ணீர் - 5 கப்
  • சிட்ரிக் ஆசிட் - 5 டீஸ்பூன்
  • கே.எம்.எஸ் - கால் டீஸ்பூன்

செய்முறை:-

பலாச்சுளைகளைப் பொடியாக நறுக்கி, 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடுங்கள். பத்து நிமிடம் வெந்ததும் இறக்கி ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டுங்கள். (வடிகட்டிய ஜூஸ் 2 கப் இருக்கவேண்டும்) சர்க்கரையுடன் 3 கப் தண்ணீர், சிட்ரிக் ஆசிட் சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடுங்கள். இறக்கி வடிகட்டி ஆற வைத்த தண்ணீர் 2 டீஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் கே.எம்.எஸ் - ஐ கலந்து ஜூஸில் சேருங்கள். நன்கு கலக்கி, பாட்டிலில் நிரப்புங்கள். தேவையானபோது, கால் கப் ஜூஸ், முக்கால் கப் தண்ணீர், சில ஐஸ் கட்டிகள் கலந்து பரிமாறுங்கள்.