பலாக் கொட்டை பக்கோடா
  • 301 Views

பலாக் கொட்டை பக்கோடா

தேவையான பொருட்கள்:

  • கார்ன் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
  • கடலை மாவு - 1 ஸ்பூன்
  • அரிசி மாவு - 1 ஸ்பூன்
  • நறுக்கிய முந்திரிப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - 2 ஸ்பூன்
  • மிளகாய்ப்பொடி - 2 ஸ்பூன்
  • கரம் மசாலா - 2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை - 2 ஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் - 2 ஸ்பூன்

செய்முறை:

நன்கு தேறிய பலாக் கொட்டை மேல் வெள்ளை தோலை எடுத்துவிட்டு குக்கரில் நைஸாக வேக வைக்கவும். ஆறிய பின் மேல் சிகப்பு தோலை உரித்து விட்டு நன்கு மசிக்கவும். இத்துடன் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பிசைந்து உருட்டி சூடான எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையாக இருக்கும்.