ஜாங்கிரி
  • 572 Views

ஜாங்கிரி

ஜாங்கிரினு சொன்னதும் பலருக்கும் ஒரு கேள்வி எழும்பும். ஜாங்கிரினா என்ன? ஜிலேபினா என்ன? அதுல என்னங்க வித்தியாசம். ரெண்டும் ஒன்னா இல்லையா?! நிச்சயமா வேற வேற தான். ஜாங்கிரி உளுந்துல செய்றது. மொறு மொறுனு இருக்கும். ஜிலேபி மைதா மாவுல செய்றது. மெதுவா இருக்கும். சக்கரபாகுல நல்லா ஊறியிருக்கும். இப்போ ஜாங்கிரி செய்து பாருங்க.... தீபாவளிய சுவையா கொண்டாடுங்க!

தேவையான பொருட்கள்:

  • உளுத்தம் பருப்பு - 250 கிராம்
  • சர்க்கரை - 200 கிராம்
  • எண்ணெய் - வறுப்பதற்கு
  • ஏலக்காய் - 4
  • கலர் - தேவைப்பட்டால்

செய்முறை:

* உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைக்கவும்.

* சர்க்கரை சிரப் தயார் செய்து கலர் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

* மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பாகத்தில் நுனியில் சிறு துளை செய்யவும்.

* வாணலியில் எண்ணெயை சூடு செய்து எண்ணெயில் முறுக்கு போல பிழிந்து முழுவதுமாக வேகும் வரை வறுக்கவும்.

* எண்ணெயிலிருந்து எடுத்து 2 நிமிடத்திற்கு சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு:

நல்ல முறையாக செய்வதற்கு உளுத்தம் பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக்கொள்ளவும். மொறு மொறுவென்று வருவதற்கு அரிசி மாவு சேர்க்கவும்.