ஜவ்வரிசி தோசை
  • 483 Views

ஜவ்வரிசி தோசை

தேவையான பொருட்கள்:-

  • ஜவ்வரிசி - 1 கப்
  • பச்சை பட்டாணி - கால் கப்
  • உருளைக்கிழங்கு - 2
  • இஞ்சி - சிறிது
  • வெங்காயம் - 1
  • பச்சைமிளகாய் - 3
  • கறிவேப்பிலை - சிறிது
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

தோசை செய்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஜவ்வரிசியை வெந்நீரில் ஊற வைக்கவும், பச்சை பட்டாணியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு, ஊறவைத்த ஜவ்வரிசியுடன் அரைத்த பட்டாணி, மசித்த உருளைக் கிழங்கு, துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக அரிந்த வெங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து தோசை ஊற்றுங்கள்.

சூடாகச் சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். தொட்டுக் கொள்ள தக்காளி சாஸ் போதுமானது.