காராமணி சப்ஜி
 • 322 Views

காராமணி சப்ஜி

தேவையானவை:

 • காராமணி - 1/2 கிலோ
 • பெரிய வெங்காயம் - 2
 • உருளைக்கிழங்கு - 2
 • தக்காளி - 3
 • பச்சைமிளகாய் - 2
 • இஞ்சி - 1 துண்டு
 • பூண்டு - 4 பல்
 • கொத்தமல்லி - சிறிதளவு
 • பட்டை - சிறிதளவு
 • சோம்பு - 1/2 டீஸ்பூன்
 • பெரிய ஏலக்காய் - 2
 • கிராம்பு - 2
 • மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
 • ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்
 • தனியாதூள் - 1/2 டீஸ்பூன்
 • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காராமணியை நன்றாக கழுவி, ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு துண்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் காராமணியை பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், உப்பு, ஆம்சூர் பொடி, தனியாதூள் ஆகியவற்றை சேர்க்கவும். காராமணி வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை, வதக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.