காரச்சேவு
  • 263 Views

காரச்சேவு

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு - 1 கிலோ
  • டால்டா - 100 கிராம்
  • அரிசி மாவு - 100 கிராம்
  • மிளகு தூள் - 2 டீ ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  • சோடா மாவு, பெருங்காயப்பொடி - 1 டீ ஸ்பூன்
  • நசுக்கிய பூண்டு - சிறிதளவு
  • எண்ணெய் - 500 கிராம்

செய்முறை:

* எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து கொள்ளவும்.