கொள்ளு துவையல்
  • 276 Views

கொள்ளு துவையல்

தேவையான பொருட்கள்:-

  • கொள்ளு - கால் கப்
  • மிளகாய் வத்தல் - 3
  • உளுந்து - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
  • புளி - சிறு துண்டு
  • பூண்டு - 2 பல்
  • தேவையான உப்பு

செய்முறை:-

கால் கப் கொள்ளை எடுத்து கொண்டு வடை சட்டியைச் சூடாக்கி அதில் கொள்ளைப் போட்டு நன்றாய பொரிஞ்சு மொறுமொறுப்பாகி, வாசனை வர்ற வரைக்கும் வறுத்து கொள்ள வேண்டும். அதே சட்டியில் 2 டீஸ்பூன் எண்ணெயை ஊத்தி காய்ஞ்சதும் மிளகாய் வத்தல், உளுந்து ரெண்டையும் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

வறுத்த மிளகாய், உளுந்து, கொள்ளு எல்லாம் சூடு ஆறியதும், தேங்காய்த் துருவல், சிறு துண்டு புளி, பூண்டு, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கொஞ்சமா தண்ணிவிட்டுக் கரகரப்பா அரைக்கவும். இந்த கொள்ளு, துவையலா மாறும்போது ருசி அருமையாக இருக்கும்.