கொத்துமல்லித் தொக்கு
  • 591 Views

கொத்துமல்லித் தொக்கு

தேவையான பொருட்கள்:

  • மல்லித்தழை - 2 கட்டு (பெரியதாக)
  • புளி - எலுமிச்சை அளவு,
  • உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 1/2 கப்


வறுத்துப் பொடிக்க:-

  • காய்ந்த மிளகாய் - 10
  • வெந்தயம் - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • பெருங்காயம் - 1 டீஸ்பூன்

செய்முறை:-

மல்லித்தழையைச் சுத்தம் செய்து, நறுக்கி, இரண்டு முறை அலசி எடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை (கருகி விடாமல்) சிவக்க வறுத்து எடுத்து, மல்லி, புளி, உப்புடன் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு தாளித்து, அரைத்த விழுதைச் சேருங்கள். சுருள, சுருளக் கிளறி இறக்குங்கள்.