லட்டு
 • 417 Views

லட்டு

திருப்பதினு சொன்னாலே லட்டுதான் ஞாபகத்து வரும். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு இனிப்பு வகைனு கூட சொல்லலாம். சுவை மட்டுமல்லாது ஒரு தெய்வீக பட்சணம்னே சொல்லலாம். நீங்களும் உங்க வீட்டில் லட்டு செய்து தெய்வ அருளோடு இந்த தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்!

தேவையான பொருட்கள்:

 • கடலை மாவு - 1 கிலோ
 • சர்க்கரை - 1-1/4 கிலோ
 • முந்திரி - 15
 • விதையில்லா திராட்சை - 10
 • சோடா - 1 சிட்டிகை
 • கற்கண்டு - 10 கிராம்
 • பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
 • எண்ணெய் - வறுப்பதற்கு
 • குங்குமப்பூ - 1 சிட்டிகை
 • ஏலக்காய் - 5

செய்முறை:

* மாவு, சோடா, நீர் சேர்த்து மாவு போல் கரைத்து சூடான எண்ணெயில் ஜார்னியின் மூலமாக விழ வைத்து வறுத்து எடுத்து பூந்தி செய்யவும்.

* 1:1 சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் செய்யவும்.

* இந்த சிரப்பில் ஒரு சிட்டிகை கேசரிப்பவுடர் சேர்க்கவும்.

* பூந்திகளை அந்த சர்க்கரை சிரப்பில் போட்டு நன்கு கலக்கவும்.

* முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து இந்த கலவையில் சேர்க்கவும்.

* ஏலக்காய் பவுடர் விதையில்லா திராட்சை சேர்த்து நன்கு கலக்கவும்.

* இந்த கலவையானது கையில் பிடிக்கும் அளவிற்கு சூடு குறைந்து விடும். இப்பொழுது சீரான உருண்டைகளாக கையில் இலேசாக அழுத்தி பிடிக்கவும். ஆற விடவும்.

குறிப்பு:

சர்க்கரை சிரப் சூடாக இருக்கும் போது சிரப்பில் பூந்தியை சேர்க்கவும்.