வெண்டைக்காயை கழுவி நுனிகளை வெட்டவும். தலைப்பகுதியை வெட்ட வேண்டாம். 1/2 மணிநேரம் வினிகரில் ஊறவைக்கவும். இது வெண்டைக்காயின் கொழ கொழப்பை குறைக்கும். பீன்ஸ் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தண்ணீர் தக்காளி பேஸ்ட், எண்ணெய், வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகுப்பொடி எல்லாம் கலந்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க விடவும். நீர் கொதித்ததும் வெண்டைக்காய் பீன்ஸ் சேர்த்து தீயைக் குறைத்து மூடி வேகவிடவும். காய்கறி வெந்ததும் இறக்கி விடவும். இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஆறியதும் ஃப்ரிஜ்ஜில் வைத்து மறுநாள் சாப்பிட நன்றாக இருக்கும்