வெண்டைக்காய் சாம்பார்
 • 565 Views

வெண்டைக்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

 • துவரம்பருப்பு - 150 கிராம்
 • வெண்டைக்காய் - 1/4 கிலோ
 • பெ.வெங்காயம் - 1
 • ப.மிளகாய் - 3
 • தக்காளி - 3 (மீடியம் சைஸ்)
 • புளி - 25 கிராம்
 • சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
 • உப்பு - தேவையான அளவு
 • கொத்தமல்லி - தேவையான அளவு

தாளிக்க:

 • சி.வெங்காயம் - 5
 • எண்ணெய் - தேவையான அளவு
 • கடுகு, உளுந்து - தேவையான அளவு
 • கருவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

* பருப்பை வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

* வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு எண்ணெய்விட்டு வதைக்கி வைத்துக்கொள்ளவும்.

* வேக வைத்த பருப்பில் சாம்பார் பொடியை போட்டு புளிக்கரைசலை விட்டு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் ஆகியவைகளை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு கடுகுஉளுந்து, கருவேப்பிலை, சி.வெங்காயம், ஆகியவைகளை சேர்த்து தாளிக்கவும்.

* தாளித்தவுடன் தேங்காய் துறுவலை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.

* பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லியை சேர்க்கவும்.

* கமகமக்கும் சுவையான சாம்பார் ரெடி.

* அப்பறென்னங்க ஒங்க வீடே ஒரே சாம்பார் வாசனையாதான் இருக்கும்.