மால்புவா
  • 562 Views

மால்புவா

தேவையான பொருட்கள்:

  • மைதா - அரை கப்
  • பால் - அரை கப்
  • சர்க்கரை - முக்கால் கப்
  • தண்ணீர் - முக்கால் கப்
  • பால் ஏடு - 3 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
  • குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
  • நெய் - தேவைக்கு

செய்முறை:-

சர்க்கரையையும், தண்ணீரையும் கலந்து அடுப்பில் வைத்து, ஒரு கம்பிப்பதம் வரை கொதிக்கவிட்டு இறக்கி, ஏலக்காய், குங்குமப்பூ சேருங்கள்.

பால் ஏடை நன்கு கடைந்து அதனுடன் பால், மைதா சேர்த்து கட்டியில்லாமல் கரையுங்கள். மிதமான தீயில் ஏந்தலான வாணலியை வைத்து, நெய்யை காயவைத்து, அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றுங்கள்.

இருபுறமும் திருப்பி, நன்கு வேகவிட்டு எடுத்து சர்க்கரைபாகில் போடுங்கள். ஒரு தட்டில் அடுக்கி, மீதமுள்ள பாகை அதன் மேல் ஊற்றி பரிமாறுங்கள்.