மாக்கீரை
  • 265 Views

மாக்கீரை

தேவையான பொருட்கள்:

  • கீரை - 1 கட்டு
  • மாங்காய் - 1
  • முழுப்பூண்டு - 1
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 2
  • மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க - எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய்

செய்முறை:

கீரையை கடைவதற்கு ஏற்றாற் போல கிள்ளி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். மாங்காயை ஊறுகாய் போடுவதற்கு நறுக்குவது போல கொஞ்சம் பெரிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். கீரையை வேக வைக்கும் பாத்திரத்தில் கீரையைப் போட்டு தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் நறுக்கிய வெங்காயம். பூண்டு, தக்காளி, பச்சை, மிளகாய். சிறிது மஞ்சள் தூள் போட்டு மூடி வேக வையுங்கள். கீரை நன்கு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் வேகவிடுங்கள். மாங்காய் எளிதில் வெந்துவிடும். பின்னர் கீரையை இறக்கி தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கீரையில் ஊற்றுங்கள். அவ்வளவுதான் மாக்கீரை தயார்.