மாங்காய் தக்காளி சாதம்
  • 92 Views

மாங்காய் தக்காளி சாதம்

மாங்காய் சீசன் ஆரம்பிச்சாச்சு.. ஆஹா இனி சுவையான மாங்காய் வெரைட்டீஸ் செய்து சாப்பிடலாம். இப்போது ஈஸியான ரெசிபில தொடங்குவோம். சிம்பிளா செய்து சூப்பரா சாப்பிடுங்க..

தேவையான பொருட்கள்:

  • புழுங்கலரிசி - 2 கப்
  • சிறிய மாங்காய் - 1
  • பெரிய வெங்காயம் - 4
  • காய்ந்த மிளகாய் - 4
  • சாம்பார் பொடி - 2 டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
  • தக்காளி - 2
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • தாளிப்பதற்கு - கடுகு, சிறிது கறிவேப்பிலை
  • தண்ணீ­ர், உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

* அரிசியைக் கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்­ணீர்விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.

* பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாறவும். மாங்காய்த் தக்காளிச் சாதம் தயார்.