மசாலா பாத்
 • 492 Views

மசாலா பாத்

தேவையான பொருள்கள்:

 • பாசுமதி அரிசி - 1கப்
 • உருளைக் கிழங்கு - 2
 • வெங்காயம் - 2
 • கேரட் - 2
 • பட்டாணி - 1/4 கப்
 • பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/4 கப்
 • கத்தரிக்காய் - 2
 • மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
 • கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
 • பிரியாணி இலை - 1
 • உப்பு தேவைக்கேற்ப
 • எண்ணெயும், நெய்யும் வறுக்கத் தேவையான அளவு

அரைத்துக் கொள்ளவும்:

தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி 1 டீஸ்பூன், சீரகம் 1/2 டீஸ்பூன், பூண்டு 4பல்லு, இஞ்சி சிறுதுண்டு, பச்சை மிளகாய் 4.

செய்முறை:

அரிசியைக் கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயத்தையும், கத்தரிக்காயையும் அரியவும். மற்ற காய்கறிகளை குக்கரில் ஆவியில் வேகவைக்கவும்,. பிரஷர் பேனில் எண்ணெயைச் சூடாக்கி பிரியாணி இலை, வெங்காயம், கத்திரிக்காய் சேர்க்கவும். சிறிது நேரம் வதக்கிய பிறகு அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து மசாலாவிலிருந்து நல்ல வாசனை வரும்வரை வதக்கவும். அரிசியை சேர்த்து, மிதமான அளவில் ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்து கலக்கிடவும். மற்ற காய்கறிகள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். இரண்டு கப் கொதிநீர்விட்டு, மெதுவாகக் கலக்கிவிட்டு குக்கரை மூடி வெயிட் வைக்கவும். அளவைக் குறைத்து 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக வைக்கவும். அங்த்த கொத்தமல்லித் தழை புதினா, இவற்றை மேலே தூவி அலங்கரித்துக் கொள்ளலாம். கமகம மசாலாபாத் ரெடி!