ஆம வடை
  • 519 Views

ஆம வடை

தேவையான பொருள்கள் :

  • கடலைப் பருப்பு - 1/2 கிலோ
  • துவரம் பருப்பு - 1/4 கிலோ
  • உளுந்தம் பருப்பு - 1/4 கிலோ
  • மிளகாய்த் தூள் - 5 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 6
  • எண்ணெய் - 1/2 கிலோ
  • இஞ்சி - 2 துண்டு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை :

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். உரலில் அல்லது மிக்ஸியில் நெறுநெறுவென்று அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். இஞ்சியைத் தட்டிக் கொள்ளவும். அரைத்த பருப்புக் கலவையில் மிளகாய்த் தூள், வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய வைக்கவும். பிசைந்த பருப்புக் கலவையை வடையாகத் தட்டி, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு வேக விடவும். பக்குவமாய் வெந்ததும், எடுத்துத் தட்டில் போடவும்.