காளான் பஜ்ஜி
  • 334 Views

காளான் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

  • பட்டன் காளான் - 15
  • கடலை மாவு - 100 கிராம்
  • சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • அரிசிமாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • மைதா - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகத்தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
  • தேவைக்கேற்ப உப்பு, எண்ணெய் எடுத்துக் கொள்ளவும்

செய்முறை:

காளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும். காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து எண்ணையில் பொரித்து எடுக்க சுவையான பஜ்ஜி ரெடி.

காலிஃப்ளவரையும் துண்டுகளாக்கி உப்பு நீரில் சுத்தம் செய்து, அரை வேக்காடாக வேக வைத்து, நீரை வடித்து விட்டு, இதேபோல் கடலைமாவு கலவையில் நனைத்து பஜ்ஜி செய்யலாம். காளானில் உள்ள தாது உப்பு, புரதமும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளும் முக்கியமானதாகும்.