மேத்தி கோலா
 • 345 Views

மேத்தி கோலா

தேவைப்படும் பொருட்கள்:

 • வெள்ளைக் கடலை - 150 கிராம்
 • வெந்தயக் கீரை (நறுக்கியது) - 3/4 கப்
 • கிராம்பு - 2
 • கருவாப்பட்டை - ஒரு துண்டு
 • ஏலக்காய் - 2
 • நெய் அல்லது எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
 • சீரகம் - ஒரு டீஸ்பூன்
 • வெந்தயம் - சிறிதளவு
 • கருவாப்பட்டை- ஒரு துண்டு
 • பச்சை மிளகாய் - 3
 • இஞ்சி (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
 • பெருங்காயத்தூள் - சிறிதளவு
 • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 • உப்பு - தேவைக்கு
 • தக்காளி - 1
 • புளி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
 • மல்லி இலை - தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய் ஓரத்தை மட்டும் கீறிவிடவும். தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். வெள்ளைக் கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். வெந்தயக் கீரையை நன்றாக கழுவிவிட்டு, இலைகளை ஒவ்வொன்றாக பிய்த்து எடுக்கவும். கிராம்பு, கருவாப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை எண்ணை விடாமல் வறுத்து, தூளாக்கவும். நெய் அல்லது எண்ணையை சூடாக்கி அதில் சீரகத்தைக் கொட்டி வறுக்கவும். அதில் வெந்தயத்தையும், கருவாப்பட்டையையும் கலந்து கிளறவேண்டும். பிரவுன் நிறம் ஆகும்போது பச்சை மிளகாய், இஞ்சி போன்றவைகளை சேர்க்கவும். ஐந்து நிமிடம் கிளறிவிட்ட பின்பு பெருங்காயத் தூளும், வெந்தயக் கீரையும் சேருங்கள். எல்லாம் வெந்த பின்பு மஞ்சள் தூள் கலந்து கிளறிவிட்டு, தேவைக்கு உப்பு சேருங்கள். பின்பு நறுக்கிய தக்காளியையும் சேர்த்திடுங்கள். தக்காளி வெந்த பின்பு அதில் வேகவைத்த கடலையை கொட்டுங்கள். கொட்டுவதற்கு முன்பு மூன்று தேக்கரண்டி அளவிற்கு கடலையை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட கலவையில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஐந்து நிமிடங்கள் நன்றாக வேக வையுங்கள். பின்பு தீயைக் குறைத்து ஐந்து நிமிடங்கள் வேகவிடுங்கள். எடுத்து வைத்திருக்கும் மூன்று தேக்கரண்டி கடலையை நன்றாக தூள் செய்து கலவையில் சேர்த்திடுங்கள். அதில் புளி பேஸ்ட் கலந்து வேக விடுங்கள். அதில் வறுத்து தூள் செய்து வைத்திருக்கும் கறி மசாலை சேருங்கள். நன்றாகக் கிளறிவிட்டு, கிரேவி கெட்டியாகும்போது, தேவைப்பட்டால் உப்பு கலந்து இறக்குங்கள். மல்லி இலை கலந்து, பரிமாறுங்கள்.