மேதி புலாவ்
 • 276 Views

மேதி புலாவ்

தேவையான பொருட்கள்:

 • பாசுமதி அரிசி - 2 கப்
 • நறுக்கிய தக்காளி - 2 கப்
 • நறுக்கிய வெந்தயக் கீரை - 1 கப்
 • நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
 • புதினா - 1 கப்
 • வெங்காயம் - 1 கப்
 • தேங்காய்ப்பால் - 1 கப்
 • இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 • கரம் மசாலா - 1 டீஸ்பூன்
 • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 • ஏலக்காய், பட்டை - சிறிதளவு
 • கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவு
 • எண்ணெய் (அ) வெண்ணெய்
 • உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் அல்லது குக்கரில் வெண்ணெய் உருகியதும், ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளிக்கவும். இதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கீரைகள், கரம் மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் பாசுமதி அரிசியையும் போட்டு வதக்கி 4 கப் தண்ணீர், தேங்காய்பால், உப்பு போட்டு நன்கு கிளறி வேக விடவும். குக்கரில் 2 விசில் வந்ததும் மேதி புலாவ் பரிமாற ரெடி!