மில்க்கி ஆப்பிள்
  • 583 Views

மில்க்கி ஆப்பிள்

தேவையான பொருட்கள்:

  • பால்பவுடர் - 1 கப்
  • தேங்காய்த் துருவல் - 1 கப்
  • சர்க்கரை - முக்கால் கப்
  • சிவப்பு உணவு கலர்பொடி - தேவைக்கேற்ப
  • டால்டா அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • லவங்கம் - 10

செய்முறை:-

சர்க்கரையை 1 கப் தண்ணீரில் போட்டு, அடி கனமான வாணலியில் பாகு காய்ச்சவும், பின், தேங்காய்த் துருவலை அதில் போட்டுக் கலந்து, கலர் பவுடரையும் போட்டு, நெய்யையும் ஊற்றிக் கிளறவும், பின் பால்பவுடரைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, கலந்து கொண்டே இருக்கவும்.

கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி, சற்று ஆறியவுடன் உருண்டைகளாக உருட்டி வைக்கவும், பின் ஒவ்வொரு உருண்டையிலும் ஒரு லவங்கத்தை வைத்து அழகுபடுத்தவும். லவங்கம் வைக்கும் போது சிறிது பள்ளமாகச் செய்து வைத்தால் பார்ப்பதற்கு ஆப்பிள் போன்றே காட்சி தரும். பிறந்த நாள் போன்ற வைபவங்களுக்கு விரைவில் செய்யக்கூடிய "சிம்பிள் ஸ்வீட்".