மில்க் டாஃபி
  • 240 Views

மில்க் டாஃபி

தேவையான பொருட்கள்:

  • கன்டென்ஸ்டு மில்க்
  • (கடைகளில் கிடைக்கும்) - 1 டின்
  • சர்க்கரை - 1கப்
  • வெண்ணெய் - 50 கிராம்
  • லிக்விட் க்ளூகோஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர் - 1கப்
  • பாதம்+முந்திரி+அக்ரூட் - 50 கிராம்

செய்முறை:

கன்டென்ஸ்டு மில்க், தண்ணீர், சர்க்கரை சேர்த்து (விருப்பப்பட்டவர்கள் லிக்விட் க்ளூகோஸையும் கலந்து) அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். இது நன்கு சேர்ந்து வரும்பொழுது, சிறிதளவு எடுத்து உருட்டிப் பார்த்தால் உருட்ட வரும். இந்தப் பதத்தில் வெண்ணையையும் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, அக்ரூட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி, சிறிது ஆறவிடுங்கள். பின்னர், சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால், சுவை மிகு "மில்க் டாஃபி" ரெடி.