மில்க் கோகனட் பர்பி
  • 339 Views

மில்க் கோகனட் பர்பி

தேவையான பொருட்கள்:

  • பால் - 1 லிட்டர்
  • தேங்காய்த்துருவல் - 1 கப்
  • சர்க்கரை - 1 கப்
  • ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  • நெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி - 1 நறுக்கியது (டேபிள் ஸ்பூன்)

செய்முறை:

துருவிய தேங்காயையும் சர்க்கரையையும் பாலுடன் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். நன்கு சேர்ந்து சுருண்டு வரும்வரை கிளறினால், பூத்தாற்போல் வரும். அப்போது நெய், முந்திரி, ஏலக்காய்த்தூள், சேர்த்து, மேலும் அரை நிமிடம் கிளறி இறக்குங்கள். நெய் தடவிய தட்டில் அதைக் கொட்டிப் பரப்பி, வில்லைகள் போடுங்கள். இது, ஒரு வாரம்வரை சுவை மாறாமல் இருக்கும்.

குறிப்பு:

தேங்காயைத் துருவும்போது, ஓட்டில் இருக்கும் கறுப்பு வராமல் துருவவேண்டும். தேங்காய்ப்பூவை, தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ஓர் சுற்று சுற்றி எடுத்துக் கொண்டால் மிருதுவாக இருக்கும். விரும்பினால், இத்துடன் புட் கலர் சேர்க்கலாம்.