மில்க் ஐஸ்க்ரீம்
  • 110 Views

மில்க் ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள் :

  • பால் - 500 மி.லி
  • மில்க் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
  • கார்ன்ஃப்ளார் - 1 1/2 ஸ்பூன்
  • ஜி.எம்.எஸ் - 3/4 ஸ்பூன்
  • சர்க்கரை - 10 ஸ்பூன்
  • வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் 1/4 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மில்க் பவுடர், கார்ன்ஃப்ளார், ஜி.எம்.எஸ் ஆகியவற்றைக் கரைத்து சர்க்கரையைச் சேர்த்து, சற்றே ஆற வைத்துள்ள பாலுடன் இவற்றைச் சேர்த்து கலக்கி ஐஸ் ட்ரேயில் 4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பாதி கெட்டி ஆனவுடன் மிக்ஸியில் ஊற்றி அடித்து மறுபடியும் ட்ரேயில் ஊற்றி, மேலும் 2 மணி நேரம் குளிர விட்டு கிண்ணங்களில் எடுத்துப் பரிமாறுங்கள். சுவையான மில்க் ஐஸ்க்ரீம் தயார்.