பால் சர்க்கரைப் பொங்கல்
  • 216 Views

பால் சர்க்கரைப் பொங்கல்

தேவையானப் பொருட்கள்:

  • பச்சரிசி - ஒரு கப்
  • பாசிப் பருப்பு - கால் கப்
  • பால் - 1 கப்
  • நெய் - 50 கிராம்
  • முந்திரிப்பருப்பு - 15
  • தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
  • ஏலக்காய் - 5

செய்முறை:

முதலில் பானையில் தண்ணீர் மற்றும் அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக களைந்து வைத்துக்கொள்ளவும். முந்திரி பருப்பை நெய்விட்டு வறுத்துக்கொள்ளவும். தண்ணீர் கொதி வந்ததும் அரிசியை போடவும். நன்றாக வெந்தவுடன் அதனுடன் தூளாக்கிய வெல்லத்தை சிறிது சிறிதாக கலக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது நெய் அல்லது டால்டா கலக்கவும். பின் முந்திரி பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நன்றாக குழைந்தவுடன் நெய் சேர்த்து இறக்கவும்.