புதினா துணுக்கு
  • 472 Views

புதினா துணுக்கு

தேவையான பொருட்கள்:

  • பொடியாக நறுக்கிய புதினா - 1 கைப்பிடி
  • அரிசி - கால் கப்
  • கடலைப்பருப்பு, துவரும்பருப்பு, உளுந்தம் பருப்பு கலவை - முக்கால் கப்
  • சிவப்பு மிளகாய் - 6
  • துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • உப்பு - சிறிதளவு
  • எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை:-

அரிசி, பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து மிளகாய், உப்பு, பெருங்காயத்துடன் கெட்டியாக கரகரவென அரைக்கவும். புதினா, தேங்காய் சேர்த்து சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக உருட்டிப் போட்டு, சிவந்த உடன் எடுக்கவும்.

மாலை நேர டீயுடன் சாப்பிட சுவையான ஸ்நாக்ஸ் இது. சாம்பார், தயிர் சாதத்துக்கும் ஈடு கொடுக்கும் சைட் டிஷ்.

தேங்காய்க்கு பதில், பொடியாக நறுக்கிய காய்கறி, வெங்காயம் சேர்த்தும் செய்யலாம்.