மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்
 • 320 Views

மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்

தேவையானவை:

 • வெந்த துவரம்பருப்பு (அ) பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
 • காய்கறிகள் - 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 • வெங்காயம் - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 • பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
 • ஏதாவது ஒரு கீரை - 1 டே.ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 • மல்லித் தழை - 1 டீஸ்பூன்
 • மிளகு - 1 சிட்டிகை
 • சிரகம் - 1 சிட்டிகை
 • உப்பு - தேவையான அளவு
 • தக்காளி - அரை
 • நெய் (அ) வெண்ணெய் - 1 டீஸ்பூன்
 • வேக வைத்த சாதம் - 1/2 கப்

செய்முறை:

சாதம், நெய் நீங்கலாக பருப்புடன் எல்லாவற்றையும் குக்கரில் போட்டு, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். வடிகட்டிய சூப்புடன், சாதத்தை மசித்து சேர்க்கவும். இத்துடன் நெய் (அ) வெண்ணெய் சேர்த்து கலந்து கொடுக்கவும்.

ஒரு வயது குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல சத்தான சூப் இது. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு மிக்ஸியில் அரைத்ததை வடிகட்டாமல், அப்படியே சாதத்துடன் கலந்து கொடுக்கலாம்.