மட்டர் பன்னீர்
  • 633 Views

மட்டர் பன்னீர்

செய்முறை:

1 லிட்டர் பாலில் பன்னீர் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 4 பல் பூண்டு, 1 தேக்கரண்டி சிரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 2 தக்காளிகளைப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 1/4 கப் அளவு கொத்தமல்லித் தழையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் 10 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி, துண்டுகளாக்கிய பன்னீரை போட்டுப் பொன் நிறமாக வறுக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, அதன் பின் தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த சிரகத்தையும், ஒரு தேக்கரண்டி கரம் மசாலாவையும் சேர்த்து நன்றாக வதக்கி, 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் 250 கிராம் பட்டாணியை மிதமான தீயில் பட்டாணி வேகும் வரை கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதன் பின் 2 மேஜைக்கரண்டி பால் ஊற்றி இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவிப் பரிமாறவும்.