மட்டன் பக்கோடா
  • 316 Views

மட்டன் பக்கோடா

மாலை வேளையில் கொஞ்சம் க்ரிஸ்பியா ஒரு நொறுக்குத் தீனி வேணும் போல இருக்கா... என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா..... 'பக்கோடா' சரியான சாய்ஸ்தான்! ஆனா ஸ்பெஷலா வேணும்....எத்தனையோ வகை பக்கோடா செய்திருப்போம். இந்த தீபாவளிக்கு வித்தியாசமா மட்டன் பக்கோடா செய்து பாருங்களேன். அப்படியே வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு செஞ்சு குடுத்து அவங்க பாராட்டையும் அள்ளிக்கோங்க!

தேவையான பொருட்கள்:

  • மட்டன் - 7 (அ) 8 சின்ன துண்டுகள்
  • வெங்காயம் - 1/2
  • இஞ்சி, பூண்டு - 1/2 டீ ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
  • ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

* குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்­ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.

* கறி வெந்தவுடன் தண்­ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.

* பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்­ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.

* மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.

* பொரிப்பதற்கு எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும்.

* சுவையான மட்டன் பக்கோடா ரெடி.

இதே மாதிரி சிக்கன் பக்கோடாவும் செய்யலாம். எலும்புடன் அல்லது எலும்பில்லாமல், சிறு சிறு துண்டுகளாக வேக வைத்துக்கொள்ளவும்.