ஓட்ஸ் கேசரி
  • 628 Views

ஓட்ஸ் கேசரி

ஓட்ஸ்ன்னாவே ஏதோ நோயாளிகள், டயாபடீஸ் பேஷண்டுகள் சாப்பிடுறதுன்னு சிலர் நெனைச்சுக்கிட்டுருக்காங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுகிற ஹெல்த் ஃபுட். பேச்சுலர்கள் கூட ஈஸியா தெரிஞ்சுக்கிட்டு வீட்டுல செஞ்சு சாப்பிடலாம். ஓட்ஸை பலவிதமான உணவுகளாக தயார் செய்து அழகாக சாப்பிடலாம். ஓட்ஸில் கேசரி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.... மிகவும் ருசியான, ரொம்ப சிம்பிளான ரெசிபி இது. என்ன சொல்லும்போதே நாக்கில் ஊறுகிறதா?!

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் - 100 கிராம்
  • சுகர் - 50 கிராம்
  • ஏலக்காய் - 2
  • நெய் - 1 டீஸ்பூன்
  • கேசரி பவுடர் - 1 பின்ச்
  • கொஞ்சம் முந்திரியும் திராட்சையும்

செய்முறை:

* ஓட்ஸை சாதாரண தண்ணீ­ரில் ஓர் ஐந்து நிமிடம் ஊறவைத்து வடிகட்டியால் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

* ஏனெனில், ஊறவைப்பதால் ஓட்ஸ் அழகாக சாஃப்ட்டாக இருக்கும்.

* ஓட்ஸோடு சுகரையும் ஃபுட்கலரையும் சேர்த்து கடாயில் போட்டு வதக்க வேண்டும்.

* கொஞ்சம் திக் ஆகி வரும்போது நெய், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைத் தூவி இறக்கி விட்டால் போதும் அட... அட... சூடான ஓட்ஸ் கேசரி ரெடி!