ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்
  • 94 Views

ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில், ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • ஓட்ஸ் - 1 கப்
  • ரவை - 1/4 கப்
  • கடலைமாவு - 1/4 கப்
  • மோர் - 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
  • கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
  • முட்டைகோஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  • குடமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகு - 1 டீ ஸ்பூன்
  • சீரகம் - 1 டீ ஸ்பூன்
  • முந்திரி பருப்பு(பொடித்தது) - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணை - சுடுவதற்கு
  • மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஓட்ஸையும், ரவையையும் ஒன்றாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வறுத்து வைக்கவும். கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மெல்லியதாக அரிந்து வைக்கவும். தேங்காயை துருவி கொள்ளவும். மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும். வறுத்த மாவு கலவைகளை ஒன்றாக உப்பு போட்டு கலக்கவும். அதனுடன் மோர் விட்டு கரைக்கவும். அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு மூன்றையும் போடவும். கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், தேங்காய்த்துருவல் எல்லாவற்றையும் மாவுடன் கலக்கவும். ஊத்தப்பம் பதத்திற்கு கரைத்தவுடன், சூடான தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.