ஓட்ஸ் வீட் பான்கேக்
  • 258 Views

ஓட்ஸ் வீட் பான்கேக்

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 1 டீ கப்
  • ஓட்ஸ் - 2 மேசைக் கரண்டி
  • ஜாதி பத்ரி - ஒரு சிட்டிகை
  • பட்டை பவுடர் - 1 டீஸ்பூன்
  • பால் - 1 டீ கப்
  • பொடித்த சர்க்கரை - 2 டீஸ்பூன்
  • சுகர் ப்ரூ - 2 மாத்திரை
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

எல்லாப் பொருள்களையும் பாலுடன் சேர்த்து, தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரும் கலந்து ஊத்தப்பம் ஊற்றும் பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும். தவாவில் கொஞ்சமாக எண்ணெய் தடவி, மாவை அதிகம் பரத்தாமல் குட்டி தோசையாக குண்டாக சுட்டு எடுக்கவும். தொட்டுக் கொள்ள சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

 

ஸ்பெஷல்:

அதிகமான எனர்ஜியைத் தரும் பைபர் அதிகமுள்ள ஓட்ஸ், சர்க்கரையை இரத்தத்துடன் மெதுவாகக் கலக்கச் செய்யும்!